உண்மை தானே....?
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
*உண்மை தானே..?*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
இறைவன் படைப்பில்
எதுவும்
கேவலமில்லை....
மனிதனே!
உன்னால் தான்
கேவலப்படுத்தப்படுகிறது....
மனிதனே...!
நீ தான்
உயர்வு தாழ்வுகளை
உருவாக்கினாய்.....
உண்மையில்
எதுவும் இல்லை.....
ஆட்டுக்கறி
சாப்பிடுகின்றவர்கள்
உயர்வானவர்கள் என்றால்..
ஆட்டுப் புழுக்கையும்
உயர்வானது தானே
அதை ஏன்
சாப்பிடவில்லை.....?
மாட்டுக்கறி
சாப்பிடுகிறவர்கள்
தாழ்ந்தவர்கள் என்றால்....
மாட்டுப் பாலைக்
குடிக்கின்றவர்களும்
தாழ்ந்தவர்கள் தானே....?
முடி தலையில்
இருந்த போது
அழகு என்று சொன்னதும்
நாம் தான்....
அது
கீழே விழுந்த போது
அசிங்கம் என்று சொன்னதும்
நாம் தான்.....
இறைவன் சன்னதில்
முடியை எடுத்த போது
காணிக்கை என்று
சொன்னதும் நாம் தான்....
சாப்பாட்டில் இருந்து
எடுத்த போது
கருமம் என்று
சொன்னதும் நாம் தான்...
கழுதை மாதிரி
வளர்ந்திருக்கிறாய்
அறிவே இல்லையா ? என்று
சொன்னதும் நாம் தான்...
கழுதை படத்தைப்
பார்த்துவிட்டுச் சென்றால்
யோகம் வரும் என்று
சொன்னதும் நாம் தான்....
தவறி
சாணியில்
கால் வைத்ததும்
முகம் சுழித்ததும்
நாம் தான் .....
சாணியில்
பிள்ளையார்
பிடித்து வை என்று
சொன்னதும் நாம் தான்.....
நமக்கு
அருவருப்பாக இருக்கலாம்
மலம்...
ஆனால்
மண்ணுக்கு அது தான்
உரம்.....
கழிவு நீர் தேங்கும் இடம்
நமக்கு
வேண்டாத இடமாக
இருக்கலாம்....
ஆனால்
கொசுக்களுக்கு
அதுதான் வாழிடம.....
மரணம்
நமக்கு
வேண்டாத ஒன்றாக
இருக்கலாம்....
ஆனால்
மானுடம்
அழியாமல் இருப்பதற்கு
அதுதான்
வேண்டிய
ஒன்றாக இருக்கிறது......
சிலவற்றிற்கு
பிரியும் இடத்தில்
தாழ்வு இருக்கலாம்...
ஆனால்
சேரும் இடத்தில்
உயர்வு இருக்கிறது.....
சிலவற்றிற்கு
பிரியம் இடத்தில்
உயர்வு இருக்கலாம்.....
ஆனால் சேரும் இடத்தில்
தாழ்வு இருக்கிறது.....
அப்படி எனில்
உயர்ந்தது எது ?
தாழ்ந்தது எது ?என்று
சொல்ல முடியுமால்
போகிறது......
ஆம் .....!
இந்த இடத்தில் தான்
உயர்வு தாழ்வு
ஒழிந்து போகிறது.....
அழிந்து போகிறது......
இப்போது புரிகிறதா
இறைவன் படைப்பில்
எல்லாம் சமமே.....
உயர்வு தாழ்வு எல்லாம்
மண்ணில் இல்லை
மனதில் இருக்கிறது.....
நாளை நாமும்
ஒத்துக் கொள்வோம்
மண்ணாகும்போது.....
*கவிதை ரசிகன்*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

