தரிசனம்
நூறு ரூபாய் மனிதன் வீட்டில் -
ஒரு நாள். ஆயிரம் வேலைகள்.
ஆயிரம் ரூபாய் மனிதன் வீட்டில் -
24 மணி நேரம். நூறு வேலைகள்.
இலட்ச ரூபாய் மனிதன் வீட்டில் -
1440 நிமிடங்கள். பத்து வேலைகள்.
கோடி வெற்றி நாயகன் வீட்டில் -
86,400 விநாடிகள். ஒரே வேலை.
விடியப் போகிறது.
சொல்லிவிடு சூரியருக்கு.