தூய நட்பில் இறைவன்
தூய நட்பால் இறைவனை அண்டிடலாம்
மாயோனைத் தொட்டு மகிழ்ந்திடலாம் கட்டியணைத்து
தொழுதிடலாம் அவன் பேரன்பிற்கு பாத்திரமாகி
அதில் நனைந்து மகிழ்ந்து பேரின்பம் எய்திடலாம்
அன்று ஆயரும் அர்ஜுனனும் குசேலரும் போல