காதல் கவிதை

காதல் கவிதை...

காதல் கவிதை எழுதிட
பேப்பரும் பேனாவோடு அமர்ந்திருந்தேன்.
கண்ணைப் பொத்தி விளையாடினாய்.
எண்ணத்தில் கம்பன் வந்தான்….
கண்ணதாசன் வந்தான்….
வாலியும் வாலிப முறுக்கோடு நின்றான்.
வைரமுத்தோ வைர வரிகளோடு வரிசையில் நின்றான்.
கண்ணே...
நீயே கவிதையாய் என்னருகே இருக்கும்போது
மற்ற கவிதைகளில் காதல் இல்லாமல் போனது.
நம் காதல் மட்டும்...
கவிதையாய் பொங்கி பெருகியதே...!

எழுதியவர் : (9-Aug-24, 8:11 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : kaadhal kavithai
பார்வை : 189

மேலே