விநோதத்துறவி…

விநோதத்துறவி…!
11 / 09 / 2024

இல்லாதவனுக்கு வெறும் தத்துவங்கள்
இருப்பவனுக்கோ பல சொத்துசுகங்கள்
பொல்லாத இவ்வுலகின் சட்டத்திட்டங்கள்
சொல்லாத பல நியாய தர்மங்கள்
வேதங்கள் சொல்வது காற்றோடு போனது
வேதனைகள் வாழ்வில் வேரோடிப் போனது
சோதனைகள் நாளும் புரையோடிப் போனது
எல்லையைத் தொடுமுன் நுரைத்தள்ளிப் போனது
ஒருநாள் வாழ்வே வெகுமதி ஆனது
மறுநாள் வாழ்வோ விடுகதை ஆனது
திருநாள் ஒன்றோ கார் மேகமானது
வருநாள் விழியில் வண்ணக் கனவானது.
ஏற்ற இறக்கங்கள் ஏடா கூடமாய்
ஒருபுறம் எவரெஸ்ட்டாய் சால உயர்ந்தும்
மறுபுறம் பள்ளத்தாக்காய் மிகவும் தாழ்ந்தும்
ஏற்றத் தாழ்வெனும் செப்பனிடாத பாதையில்
பயணங்கள் சுமைகளாய் நாளும் பெரும்பாடாய்
நயனங்கள் இரண்டும் கண்ணீரில் நனைந்தே
சயனமதை மறந்து நடை பிணமாய்
மயானம் நோக்கி சிலுவையைச் சுமந்து
தியானம் செய்து பாவம் போக்க
நிதானமாய் நாளைத் தள்ளும் ஈனப்பிறவி
நல்லதும் கெட்டதும் கலவையாய் மனிதப்பிறவி
எல்லாம் இருந்தும் ஒன்றுமில்லா விநோதத்துறவி
யார்...?
நம்மைத்தான் சொல்கிறேன்.....!

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (11-Sep-24, 8:32 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 44

புதிய படைப்புகள்

மேலே