இன்று சி.வி.ராமன் பிறந்த தினம்(1888)
இந்தியாவிற்கு நோபலா ?
இயற்பியலுக்கு நோபலா ?
"அலைநீள மாற்றத்தினால்"
அவனிக்கே நீ தந்தவனே.
திருச்சியிலே உன் பிறப்பு
தெரிந்து கொண்டதால் வான் நீலம்
பகல் பொழுதின் அதன் நிறத்தை
பகுத்தறிந்து சொல்லிவிட்டாய்.
விருதுகளில் வாழ்நாளை
விருந்தாக கொண்டவனே
விஞ்ஞானத்தின் மாற்றத்திற்கு
விதையாக அமைந்தவனே
பிறந்த நாளில் கூடுகின்றோம்
பெருமை பேசி கலையாமல்
இயற்பியலிலே பல கண்டுபிடிப்பை
இன்றிலிருந்து நாங்கள் தொடங்குவதற்கு .