மழை
ஒ
மேக உஞ்சலில் துயிலும்
மழையே ...
தென்றல் தாலாட்டும்போது
சுகமாய் இருந்தவள் ...
காற்று அசுரன் அடித்து
தள்ளியதால்
கீழே விழுந்து
மண்ணோடு மண்ணாக
மாண்டு போகிறாய்...
ஆனாலும்
உனக்கு சாகா வரம்தான்...
அதனாலதான்
மீண்டும் ...மீண்டும்
உயிர்த்தெழுந்து
தொடர்கிறாய் ....