முத்தெடுத்து வந்தாய் முழுநிலவே பூவிதழில்

முத்தெடுத்து வந்தாய் முழுநிலவே பூவிதழில்
அத்தனைவெண் மையில் அழகினி லேகோர்த்தாய்
எப்படியோ அந்தி எழில்சிந்தும் ஓவியமே
செப்படி செவ்வாய் திறந்து

---- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

முத்தெடுத்து வந்தாய் முழுநிலவே பூவிதழில்
அத்தனைவெண் மையில் அழகினிலே -- முத்தழகி
எப்படிநீ கோர்த்தாய் எழில்சிந்தும் ஓவியமாய்
செப்படி செவ்வாய் திறந்து

--- இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-24, 10:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே