என் கிராமத்து காதலன்
எண்ணெய் படிந்த தலை
அடர்ந்த புருவங்கள்
முறுக்கிய மீசை
கருத்த உதடுகள்
கடுகடுத்த பார்வை
முரட்டுத்தோள்
நன்கு உரமேறிய கைகள்
படர்ந்த மார்பு
தொந்தியில்லா வயிறு
முறுக்கிய கால்கள்
மாமா நீ நடந்து வரும் போது
ஊர் ஆம்பிளைகள் எல்லாம் மறைந்சிருவங்க
அம்புட்டு பயம் உனக்கு
பெண் குட்டிங்க எல்லாம் உன்ன மறஞ்சி இருந்து பார்குதுங்க
அம்புட்டு பொறமை எனக்கு
ஊருக்கு சண்டியாரான நீ
என்கிட்டே மட்டும் எப்படி குழந்தை ஆகிற..
மாமா சத்தியமா சொல்லுறன்
எங்க டவுன் ல கூட இப்படி ஆம்பிளைகள
நா பார்த்தில்ல.....

