என் இலட்சியங்கள்
வானுயர ஏணி கொண்ட
நிலாபயணம் ......
வழியெல்லாம்
சில நொடி வெற்றிக்காக
பல யுக தோல்விகளை
பல்லாக்காய் சுமக்கின்ற
தோள்கள் .......
கருந்தேள் நாகம்
பாதம் கொட்டி
கருங்கல் புயல்
கால் இடறி
மல்லிகை ரோஜா
மலர் துவி
என் லட்சியங்களை
பின் நோக்க தூது விழைந்தாலும்
முன் பார்க்கும் என் விழிகள்.....

