தமிழ்ப் பழமொழி - வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு என்பதை விளக்கும் நமது பண்டைய பெரியோர்களின் அனுபவ மொழி இது.

ஒருவன் எதை விதைக்கிறாரோ அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப்பதிலாக சோளம் விளையாது. அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும்.

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும்.

இந்த வினை பயன் உடனே இல்லாமல் எப்போதாவது கூட கிடைக்கலாம். மறுபிறவியில் நம்பிக்கை உள்ள நம்மவர்கள் ஒரு பிறவியில் நாம் செய்யும் செயலுக்கான பலன் (கர்மபலன்) நிச்சயம் அடுத்தப்பிறவியில் கிடைக்கும் என்பதை கூறிச்சென்றுள்ளார்கள். இது நமது எல்லா இதிகாசங்களிலும் இலக்கியங்களிலும் காணக்கிடைக்கிறது. முக்கியமாக சிலப்பதிகாரத்தைச் சொல்லலாம்.

தொடர்புடைய பழமொழிகள்:-
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

வினை - கர்மம், செயல்
தினை - ஒருவகை தானியம்.
இருவினைகள் - நல்வினை தீவினை (தீய வினை)
அறுப்பான் - அறுவடை செய்வான்.

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 12:41 pm)
சேர்த்தது : SathyaSenthil
பார்வை : 20987

சிறந்த கவிதைகள்

மேலே