மயிர் இழை ஊடல்
அவர் ஒரு பெரிய நிறுவனத்தின் டாப் எக்சிகூடிவ்
[EXECUTIVE } தினமும் ஏதாவது டின்னர் பார்ட்டி
இருக்கும் இரவில் மிக லேட்டாகத்தான் வீட்டுக்கு
வருவார் . மனைவிடம் கோட்டை கழற்றித்
தருவார் கோட்டை வார் ட்ரோப்பில் போடும் முன்
நன்றாக ஆராய்ச்சி செய்து தேடுவாள் மனைவி
ஒரு நீண்ட மயிரிழையை கண்டு பிடிப்பாள்
யார் இவள் எத்தனை நாளாய் தெரியும் என்று
சண்டை துவங்கிவிடும் பானிபட் யுத்தம்
அரைமணி ஒருமணிநேரம் நீடிக்கும்
இது அன்றாட வழக்கம் தினம் ஒரு மயிரிழை
தினம் ஒரு பூசல்
வழக்கம்போலவே அன்றும் இரவில்
லேட்டாயதான் வந்தார் கோட்டை கழற்றி
மனைவியிடம் கொடுத்தார் தேடினாள் தேடினாள்
ஒரு மயிரிழை கூட கிடைக்கவில்லை
கோட்டுடன் அமைதியாக அவரிடம்
வந்தாள்
பேஷ்
இப்ப எல்லாம் வழுக்கை தலைச்சிகளுடனும்
சகவாசம் ஆரம்பிச்சிடுத்தா என்றாள்
----கவின் சாரலன்