என் மனதின் உளறல்கள்.........
தரிசாய் இருந்த என் மனம்
உன் வருகையின் பின்....
பருவமழை கண்ட நஞ்செய்
நிலமாய் .....
கனவின்றி இருந்த என் இரவுகள்
உன் வருகையின் பின்.....
வண்ண வண்ண ஓவியமாய்
இனிய கனவுகளுடன்.......
யார் என்ன சொன்னாலும்
தனியே சிரிப்பதையே விரும்புகிறேன்....
என் புன்னகைக்கு நீ ரசிகன் என்பதால்....
உன்னுடன் உரையாட புதிதாய்
வார்த்தைகளை கற்கிறேன்....
புதிதாய் பள்ளியில் சேர்ந்த
மழலை போல.....
என்னுடன் நீ உரையாடி சென்றதை
மீண்டும் நினைவு கூர்கிறேன்....
புது கவிதை படைக்க....
புதிதாய் கவிதை படைக்க.....
நிழலும் சுட்டெரிக்கும் சூரியனாய்...
கோடை வெப்பமும் இதம்
தரும் குளிராய் தோன்ற....
இனிதாய் உன்னுடன்
என் நடை பயணம்.....
வரம் பெற தவம் இருக்கையில்....
நான் வரமாய் பெற்ற என் இனியவனே....
அடுத்த சென்மத்தில் நான் நீயாய்
பிறக்க தவம் புரிகிறேன்.....
நின் போலவே என் அன்பை
உனக்களித்து என் கடன் தீர்க்க .....