புரோட்டா

வட்ட நிலவே...
மைதாவினால் ஆனா தட்டு நிலவே..
நீ இல்லாத விருந்துகளும் குறைவு..
உன்னை தொடர்ந்து உண்டுவந்தால் ஆயுளும் குறைவு..

எண்ணெயும் மைதாவும் கொண்ட காதலின் விளைவு..
மாவுருண்டையாகி ... சில நிமிடங்களில் அடுப்பினில் வெந்து...
தங்கமாய் பிறக்கிறாய்...

எனக்கொரு சந்தேகம்..
தகதக என மின்னுகிறாய்..
வட்ட நிலவுபோல் வட்டமாய் இருக்கிறாய்...
மெதுமெது தேகம் கொண்ட நீ பெண்தானே..

குடல் வலிமையை நீ புரட்டி எடுக்க..
புரட்டி எடுத்த உன்னை மென்று ருசித்து நான் பழிதீர்க்க..
கோபித்து கொள்வாய் நிதமும் செரிமானம் ஆகாமல்..

புரியாத பாஷையில் யார் வைத்தாரோ உனக்கு பெயர் புரோட்டா என்று..
வயிற்றில் புரட்டு புரட்டி எடுப்பதாலோ அந்த பேரோ !!!
உன்னை அதிகம் உண்டால் எங்கள் வாழ்விற்கு நீ டாட்டா காட்டுவதால் இந்த பேரோ..

புரியாமல் மெல்லுகிறேன்..
என் பசி தீர்க்க ...உன்னை உட்கொள்வதாக நினைத்து..
உன் பசிக்கு நான் மெல்ல தீர்ந்து போகிறேன்...
என்னையும் அறியாமல்.....

எழுதியவர் : கலிபா சாஹிப் (23-Dec-11, 10:15 pm)
பார்வை : 507

மேலே