மன பொருத்தம் !!!

"வாசல் தோறும் தோரணைகள், இனிய மேள தாளங்கள், உறவுகளின் அன்பு நலம் விசாரிப்புகளுடன் அர்மர்க்கள பட்டு இருந்தது சேகரின் இல்லம். அவனின் தமக்கையின் திரு மணத்தால் அவ்வில்லமே விழா கோலம் பூண்டு இருந்தது."

சிறுவர் சிறுமிகளுடன் செல்ல விளையாட்டில் எதேச்சையாக மோதலில் சந்தித்தது "சேகரனின் விழிகளும், கல்பனாவின் விழிகளும்."

பார்த்தவுடன் வரும் காதலில் நம்பிக்கை இல்லை தான் சேகருக்கு என்றாலும், இந்த 'ஜென்மத்தின் உறவின் தொடராய் உயிரின் உருவமாய் கண்டதும் தனக்கான துணையை சந்திததிலும் எல்லை இல்லா ஆனந்தம் இருவர் மனதிலும்". ஆனாலும் இருவருக்கும் "பேச மொழி இல்லை".

திருமணம் முடிந்ததும் பிரிய மனம் இல்லாமல் பிரிய நேர்ந்தது. நாட்கள் உருண்டோடின. மீண்டும் இருவரும் சந்தித்த பாடில்லை ஆனாலும் "அவனை நினைத்திராத நொடி இல்லை". ஒருமுறை ஏற்பட்டதுதான் என்றாலும் மனதில் ஓராயிரம் முறை நினைத்து கொண்டால் அந்த சந்திப்பை" பல கனவுகளுடன் வாழ தொடங்கி விட்டனர் இருவரும்.

ஒரு நாள் மாலை நேரம்,

அடியே "கல்பனா சாய்ந்திரம் மாப்பிள்ளை வீட்டு காரங்க வராங்க தல வாரி, பூ வச்சி அந்த சீலைய கட்டிக்க " இது கல்பனாவின் அம்மா

என்ன செய்வது என்பதை அறியாது தவித்தாள். தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லவோ, தான் மனதை கவர்ந்தவனை பற்றி சொல்லவோ தைரியம் இல்லை. பெற்றோரின் அன்புக்கும், கட்டுபட்டிற்கும் கட்டு பட்டு வாழ்ந்து விட்டாள். அவர்கள் முன் நின்று பேசவும் துணிவில்லை. தான் மாட்டேன் என்று சொன்னால வந்தவர்கள் முன்னால் தலை குனிவு ஏற்படும் என்று, ஆயிரம் போரட்டங்களுடன், மாப்பிள்ளை வீட்டாரின் முன்னால் போய் நின்றாள்.


மாப்பிள்ளை ஏறெடுத்து பார்க்க மனம் இல்லை. சிலையாய் நின்றாள். "எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சு இருக்கு அடுத்த முகூர்ததுலையே கல்யாணத வச்சிக்குவோம்" என்று மாப்பிள்ளையின் தாயார் கலா. சொன்னதும் கண்களில் நீர்வற்றும் வரை அழுது தீர்த்தாள். இருந்தும் என்ன பயன், கல்யாண ஏற்பாடுகள் ஜருராய் நடந்து கொண்டு இருந்தது.

தன் வாழ்வு அவ்வளவு தானோ, நான் கண்ட கனவெல்லாம் பொய்த்து விட்டதே, முகம் அறியா, விருப்பம் இல்லாமல் ஒருவருடன் வாழ்வதா? உறக்கமின்றி தவித்தாள்.

மணவறையில் மாப்பிள்ளை பட்டு வேட்டி சட்டையுடன் ஆயிரம் கனவுகளுடன் காத்திருந்தான்,

எந்த கனவும் இல்லாமல்,தான் வாழ்வு தொலைய போகிறதே அவனை மீண்டும் நினைக்கும் உரிமையும் இன்னும் சில நொடியில் பறிபோக கூடுமே என்ற தவிப்பில் இருந்தாள் கல்பனா.

மணமேடை மெல்ல நடந்து சென்றாள் , இன்னும் அவளுக்கு அவனை பார்க்க மனம் இல்லை. கண்முன் அன்று ஏற்பட்ட சந்திப்பு நிழலாடியது.

கல்பனா.. கல்பனா.. அருகில் அழைக்க நினைவு திரும்பினாள். "இப்பவாச்சு மாப்பிள்ளைய பாரு" என்று தோழிகளும் உடன் இருந்தவர்களின் வற்புறுத்தலால் வேறு வழி இன்றி மணமேடையில் பார்த்தாள்.

முகம் முழுதும் சந்தோஷமாய், "பெற்ற குழந்தை தன்னை முதன் முதலில் அம்மா என்று அழைத்த சந்தோசம்", "ஆசையாய் வளர்த்த ரோஜா செடியில் மொட்டு மலர்ந்த சந்தோசம்", "முதல்நாள் பள்ளி சென்ற குழந்தை மாலையில் தாயை கண்ட சந்தோசம்" அத்தனையும் ஒன்று சேர கிடைக்க சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தாள். மணவறையில் அதே சேகரை கண்டதும்.

கல்பனாவின் அம்மா அருகில் வந்து கல்பனாவின் தோல் பற்றி, "உன் மனசு எங்களுக்கு தெரியாதாம, நீ மாப்பள வீட்டு காரங்க வராங்கனு சொன்னதுல இருந்து உன் முகமே சரி இல்ல, அப்புறம் சேகர் தம்பி வந்து என் கிட்டயும் உங்க அப்பாக்கிடையும் பேசின பிறகுதான் தெரிஞ்சது." அதான் தரகர்கிட்ட சொல்லி அந்த பையன் விடல இருந்து வரவேண்டாம், நாங்க எங்க பொண்ணுக்கு வேற பையன பார்த்துட்டோம் சொல்லிட்டு உன் மனசுக்கு பிடிச்ச சேகரையே பேசி முடிச்சிட்டோம். "உன் சந்தோசம் தானே மா எங்க சந்தோசம். எங்களுக்காக நீ உன் வாழ்கையே தொலைக்க நெனைச்சியே மா" என்று அழுத தாயின் காலில் விழுந்து தன் "கண்ணீரால் தன் நன்றியை தெரிவித்தாள்".

"நேரமாகுது பொண்ண அழைச்சிட்டு வாங்க" என்று புரோகிதர் சொன்னதும் அவளை அழைத்து சென்று மேடையில் அமர செய்தனர், சேகருக்கு தன் கண்களால் நன்றியை தெரிவித்தாள் .

புரோகிதர் வேதங்கள் முழங்க இனிய மங்கள மேளத்துடன் சேகர், கல்பனாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அவளை தனக்கு சொந்தமாக்கி கொண்டான்.

கல்பனாவும் இனி தான் சேகருக்கு சொந்தம் என்று மெல்ல அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். சேகரின் விரல்கள் கல்பனாவின் தலை வருட,அவளின் கண்ணீர் அவனின் மனதின் வழியாக இதயத்தை நனைத்தது.

இருவரின் மன பொருத்தமே அவர்களை வாழ்வில் ஒன்று சேர்த்தது.


(பெற்றோரை புரிந்து நடந்து கொள்ளும் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் மனம் அறிந்து நடந்து கொள்ளும் பெற்றோருக்கும் இந்த கதை சமர்ப்பணம்)

எழுதியவர் : கவி (28-Dec-11, 4:31 pm)
பார்வை : 886

மேலே