இருவதில் காதல் அறுவதில் திருமணம்

அன்று பதினெட்டு, முதல் நாள் கல்லூரி, நிறையா கனவுகளோடு கல்லூரியில் கால் பதித்தேன். பதித்தவுடன் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவா! அவ்வளவு அழகா இருந்தா, என்னோட உயரம், என்னோட கலர், அப்படியே எனக்கே படைக்கப்பட்ட மாதிரி இருந்தா! நா பாக்கறத அவா பார்த்திட்டு எனகிட்ட கேட்டா நீ 1st yeara?னு இன்னும் மறக்கல அவ கேட்ட வார்த்தைய. நா பதில் சொன்னேன் ஆமான்னு. இரண்டு வேரும் ஒரே bench. எனக்கு அவளவிட்டா வேரயாரையும் தெரியாது. அவளுக்கும் அப்படிதான். அன்னைக்கு LUNCH அவக்கூட,. ரொம்ப நேரம் சாப்பிட்டோம். ஏதோ, ரொம்ப நாள் பழகியது போல பேசுனோம். எனக்கே தெரியல நா அவள காதலிச்கது, ஆன அன்னையிலிருந்து close friendsஆ ஆகிட்டோம் எல்லாரும் பொறாம படுகிறமாதிரி, எப்படி அவக்கிட்ட காதல சொல்ல, எல்லார மாதிரியும் எனக்கும் தயக்கம், அவ்வளுக்கு ரோஜானா ரொம்ப பிடிக்கும். அதனால என்னுடைய வீட்டையே ரோஜா தோட்டமா மாத்திட்டேன். இன்னைக்கு சொல்லலாம் நாளைக்கு சொல்லலாம்னு நினைச்சு நினைச்சு சொல்லவே இல்ல, FAREWELL DAY இன்னைக்கு. இன்னைக்கு சொல்லலைனா என்னைக்குமே சொல்ல முடியாதுன்னு நினச்சேன். சொல்லிட்டேன் அதற்கு அவ சொன்ன பதில் நாம நல்ல FRIENDU னு நினைச்சேன். அப்பவே செத்துட்டேன். அப்பறம் சொன்னா ஒன்னு போன உயிர் திரும்ப வந்துச்சு என்ன சொன்னா தெரியுமா? விதியிருந்தா சேருவோம்னு. ஒம்மேல எப்ப காதல் வருதோ அப்ப நானே தேடி வருவேன்னு சொன்னா? அந்த வார்த்தைக்காக நேத்து வர காத்திருந்தேன் காலம் ஒடி விட்டது. வயது அறுவது. இனி என்ன செஞ்சுது இந்த கிழம்னு நினைக்கீங்களா? மேல கேளுங்க, நேத்து அவள பார்த்தேன். அன்னைக்கு பார்த்த மாதிரியே இருந்தா? அவக்கிட்ட எப்படிக் கேட்க உனக்கு கல்யாணம் ஆயிருச்சான்னு. தயக்கமா இருந்துச்சு தாளியும் கழுத்தல இல்ல. கேட்டிடலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள அவளே கேட்டா? நினைச்சுக்கூட பாக்கள என்ன பைத்தியக்காரன்னு சொன்னவுங்களுக்கு செருப்படி கொடுத்திட்டா. இனிமே நா காத்திருக்க போறதில்ல ஏன அவ என்ன தேடி வந்துட்டா, இதா வாரேன் ஒரு நிமிஷம். எனக்கு இன்னைக்கு கல்யாணம் கூப்பிடுறாங்க போய்ட்டு வாறேன்

எழுதியவர் : JEGANJOE (31-Dec-11, 2:25 pm)
பார்வை : 883

மேலே