அவன்,அவள்,அது.! - சிறுகதை- பொள்ளாச்சி அபி

தனது தூக்கத்தை கலைக்கமாட்டானா..என்ற ஏக்கத்தில் அவள்.அவளது தூக்கம் கலைந்துவிடுமே.., என்று அவன்..,நாட்கள் ஓடுகின்றன.

ஓரே வீட்டிலிருந்தாலும்,ஒவ்வொரு இரவும்,அவர்கள் நிலை இப்படியே தொடர்ந்தது.

ஒரு ஆவேசத்தில் தொடுத்த வழக்கிற்காக. கோர்ட்டிலிருந்து விவாகரத்து என்று தீர்ப்பு வரும்வரை..!.


--கதை அவ்வளவுதான்.. ,இதைப்படிக்கும் உங்களுக்கு நேரமிருந்தால்,கடைசி வரியின் தொடர்ச்சியாக,மீண்டும் முதல் வரியிலிருந்து படித்துப்பாருங்கள்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (2-Jan-12, 3:29 pm)
பார்வை : 1070

மேலே