உண்மை காதல் ................
உண்மை காதல் ................
பாத சுவடுகள்
தெரியவில்லை இருப்பினும்
உன் பாதங்களை
வந்தடைந்தேன் !!!
நீயே சரணம்
என நித்தம் நித்தம்
உருகினேன் !!!
என் இதயத்தில்
உனக்கென ஒரு
காதல் கோவிலை எழுப்பினேன் !!!!
மங்கையே !!!
மனதுருக வேண்டினேன் உன்னிடம்
அமுதமாகிய
உன் காதல் மலர்களை
எனக்கு
பரிசளித்து விடுவாய் என்பதற்காக !!!!
மாறாக
விசத்தையும்
மனதை தைக்கின்ற
நெரிஞ்சி முள்ளாகிய
உன் கோபத்தையும்
பரிசளித்தது ஏனடி ????
இது தான்
உண்மை காதலின்
விளைவா?????

