மூன்றெழுத்து கவிதை

என் வாழ்வில் நான்
எழுதிய முத்தான
முத்த கவிதை- அது
மூன்றெழுத்து கவிதை...
"எத்தனைதான் நினைவுப் பரிசுகள்
கொடுத்தாளும்
என் நினைவே பரிசாய்
கொண்டவளே..
உன் உணர்விலும் உன்னை
உயிருக்கு மேலாய் நேசிக்கிறேன்- உந்தன்
உயிரணுவில்தானே சுவாசிக்கிறேன்
இன்று... நான் இப்படி இருக்க
எப்படி எல்லாம் தியாக போராட்டம்
நடத்திய...
உன்னை நினைத்து பல
கவிதைகள் எழுத துடித்த என்னால்
உன் அன்பை நினைத்து ஒரே ஒரு
முத்த மூன்றெழுத்து கவிதை மட்டுமே
எழுத முடிந்தது -அந்த கவிதை
"அம்மா""

என்றும் அன்புடன்
உன் உயுரின் உயிர்..

எழுதியவர் : (15-Jan-12, 7:44 am)
பார்வை : 496

மேலே