தேடல்
வாழ்கை வண்டியின் சக்கரம் தேடல்
நம்மை நமக்கு அடையாளம் காட்டும் தேடல்
தூக்கத்திலிருந்து விழிக்க வைக்கும் தேடல்
தூங்க விடாமல் இயங்க வைப்பதும் தேடல்
நாளைய பொழுதை அர்த்தமாக்கும் தேடல்
நல்ல சிந்தனைக்கு வித்தாகும் தேடல்
சுவாசக் கூட்டினை இயங்க வைக்கும் தேடல்
சக்தியை திரட்டி சாதிக்க வைக்கும் தேடல்
அர்த்த மற்றவைக்கும் அர்த்தம் தரும் தேடல்
ஆண்டவனை நமக்கு உணர வைப்பதும் தேடல்
தேடுவது வேறு பட்டாலும் தேடல் ஒன்றன்றோ
தேடல் இல்லையேல் மானுடம் ஏது?