நச்சின்னு தன்னே காட்டிக்கிறான்
நச்சின்னு தன்னே காட்டிக்கிறான்
நல்லெண்ண தலேல இல்லே இல்லே
பரட்டத் தலையா பயித்தியம் போலே
பொலம்பல் பேச்சிலே தமிழே இல்லே
நாகரீக இளைஞா..நல்லாருக்கா நல்லாருக்கா ?
பாண் பராக்கு துகள் பல்லில் இருக்கு..!
பாவிப் பய ஒன்ன நம்பி நம்ம
பாரத நாடே இருக்கு....!
ஏறு போல ஓன் நடைய எங்கே...?
கூரு வாளைப் போலே விழியை எங்கே ?
குழிவிழுந்து கண்ண மறைக்க
கூலிங் கிளாஸ் போட்டாயோ..?
சினிமாக் கொட்டகையிலே எந்த
சிங்காரிக்கு சீட்டப் புடிக்க ?
சீரழிஞ்சு போகாதே சிந்தனை செய்திடடா..
சீமை வழி நாகரீகம்
சின்னவனே நமக்கு வேணாம்
சீரான தமிழ் பண்பாடு சீர் தூக்கி வாழ்ந்திடு நீ