நட்பின் சிறப்பு

ஆகாயம் மண்ணுக்கு பொழிதலை விட
ஆதவன் பூமிக்கு ஒளிதலை விட
ஆறுகள் உயிர்களுக்கு உதவுதலை விட
ஆருயிர் நண்பனின் உதவி பெரிது

நல்ல பசும்பாலின் நிறத்தை விட
நடுகடலில் கண்டெடுத்த முத்தை விட
நகையாக மின்னும் வெள்ளியை விட
நல்ல நண்பனின் மனம் வெள்ளை

மலர்கள் தரும் மணத்தை விட
மனதை ஈர்க்கும் மழையை விட
மழையில் ஆடும் மயிலை விட
மனதில் தோன்றும் நட்பு அழகு

தினமும் உதிக்கும் சூரியனை விட
திகட்டாத உணவான அமிர்தத்தை விட
திறம்பட உருவான கவிதையை விட
திறந்த உள்ளமுடைய நட்பு சிறப்பு

உன்னதமாய் செய்யப்படும் காதலை விட
உலகமே வழிபடும் இறைவனை விட
உடலை இயககும் உயிரை விட
உயிர் நண்பனின் நட்பு உயர்வு

-கலைசொல்லன்

எழுதியவர் : கலைசொல்லன் (2-Feb-12, 11:48 pm)
சேர்த்தது : kalaichollan
பார்வை : 2578

மேலே