உயிர் நட்பு 2

எல்லா காலத்திலும் அணையாத விளக்கு
எளிதில் இதன்மேல் படியாது அழுக்கு
எதிர்ப்பார்ப்பு ஏதும் இல்லாத துணைதான்
எதிர்க்க நேர்ந்தால் பொல்லாத வினைதான்

ஏழை எஜமானன் என்ற பிரிவுகளின்றி
ஏற்றம் தருகின்ற உயிர்நட்பிற்கு நன்றி
ஏமாற்றம் தாராத நட்பே உண்மை
ஏற்றல் ஏற்படும் வாழ்வில் நன்மை

ஐந்து விரல்களும் கைகளுக்கு நண்பன்
ஐயமில்லை ஆபத்தில் கைகொடுப்பான் நண்பன்
ஐந்தே நொடிகளில் அருகினில் நிற்பான்
ஐயமில்லை சுமைகளைத் தானே ஏற்பான்

ஒழுக்கம் நன்னெறி கொண்ட நட்பு
ஒருவன் காத்திட வேண்டிய கற்பு
ஒருநாளும் விடியாது சூரியன் இன்றி
ஒன்றும் நடக்காது நண்பன் இன்றி

ஓடும் வண்டிக்கு தேவை உந்துசக்தி
ஓடும் வாழ்விற்கு நட்பே உந்துசக்தி
ஓயாத காதலும் உன்னத தாய்மையும்
ஓங்கிய நட்புமுன் பாயாது போகும்.

-கலைசொல்லன்

எழுதியவர் : கலைசொல்லன் (2-Feb-12, 11:33 pm)
பார்வை : 603

மேலே