மனம்

என்ன செய்வது எனும் பொழுது கடவுளை

எண்ண செய்வது நம் மனம்தான்

பத்தும் செய்யும் பணம் தான்

அத்துடன் மேலும் செய்யும் மனம்தான்

காசே தான் கடவுளடா என்பது மனதின்

மாசே தான் அது உறுதியடா

எண்ணும் வாழ்க்கையல்ல எழுத்தும் வாழ்க்கையல்ல

எண்ணும் எண்ணமே வாழ்க்கையடா

திருமணம் என்பது இருமனம் சேர்வதே!

மனமணம் என்பது இறைவனைச் சேர்வதே!!

-கலைசொல்லன்

எழுதியவர் : கலைசொல்லன் (3-Feb-12, 12:14 am)
Tanglish : manam
பார்வை : 308

மேலே