என் இனிய தமிழினமே!

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நம் கொள்கை
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது நம் வாழ்கை

காதலும் வீரமும் கலந்தது நம் பரம்பரை
அன்பும் அரவணைப்பும் மிகுந்தது நம் தலைமுறை

கொடுத்துக் கொடுத்து வளர்ந்தது நம் வழிமுறை
வந்தாரை வாழவைப்பது நம் நடைமுறை

அன்பே கடவுள் அறிவே வேதம் என்பதே நம் நெறிமுறை
பண்பே பெருமை பணிவே பெருமிதம் என்பதே நம் செயல்முறை

அடக்கம் அமரர் ஆக்கும் இதுதான் நம் சத்திய வாக்கு
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இதுதான் நம் நித்திய வாக்கு

திரைகடல் ஓடி திரவியம் தேடு இதுவே நம் போக்கு
உயர்மலை ஏறியே முக்தியை நாடு இதுவே நம் நோக்கு

எழுதியவர் : ரத்னா (7-Feb-12, 1:26 am)
சேர்த்தது : RATHNA
பார்வை : 227

மேலே