திருமணமாகாத என் தோழா..!!
![](https://eluthu.com/images/loading.gif)
இவள் தானோ அவள் தானோ என்னவள் என்று
பார்க்கும் பேசும் பொண்ணுங்க எல்லாத்தையும்
நெனச்சி ஏங்குது மனசு
வயசு பசங்க நாங்க ஆமாம்
வயசானாலும் பசங்க நாங்க
இப்படி சொல்லித்தான் மனச தேத்திகிறோம்
பெத்தவங்களும் பல பொண்ணுகள பாத்தாச்சு
பொண்ணு புடிச்சிருந்தா பொருத்தம் சரிஇல்ல
பொருந்தி வந்ததுன்னா பொண்ணுக்கு புடிக்கலையாம்
நான் கொஞ்சம் கருப்புதான் நிறம் கொஞ்சம் கம்மி தான்
அரசாங்க உத்தியோகம் இல்லதான் தனியாரா இருந்தாலும்
தன்மானத்தோட தான் இருக்கேன் கைநிறைய இல்லனாலும்
மனசுக்கு திருப்பதியா தான் இருக்கேன்
எந்த கெட்ட பழக்கவழக்கமும் வச்சுகவுமில்ல
எல்லோரும் காசதான் பாக்குறாங்க
நல்ல மனச எங்க பாக்குறாங்க
என்னஎன்னவோ சொல்லுறாங்க வேண்டான்னு வெளக்குறாங்க
அப்பாஅம்மா அசந்தாங்க பார்த்துப் பார்த்து
ஒன்சாங்க
என்கிட்டே கேள்வியும் ஒன்னு கேட்டாங்க
காதலு கீதலுன்னு ஏதாவது பண்ணி இருக்கக்கூடாதா?...
இருபதுல தெரியலையே இப்போ எந்த பொண்ணும் சிக்கலையே...
முன்வழுக்க விழுந்தாச்சு மும்பதையும் தாண்டியாச்சு
அப்பாவா இன்னும் ஆகலையே
அந்தவாய்ப்பும் இன்னும் அமையலையே...
கண்ணுக்குள்ள ஆச கண்மூட மறுக்குது
இமை மூடினாலும் மனசு உறங்காம தவிக்குது
இரவெல்லாம் வெறும் கனவாச்சி
நித்தம் நித்தம் தூக்கம் கலஞ்சிருச்சி
எப்போ விடியுமுன்னு ஏக்கம் பொறந்துரிச்சி
கண்ணுக் கழகா இல்லனாலும் குடும்பத்துக்கு பொறுப்பா
நிறைவான ஒருபொண்ணு எப்போதான் வருவாளோ..!!