காதல் என் தாய்மடி .....!!!!! ( Dedicated to True Lovers )

முதல் சந்திப்பில் கொஞ்சமாய் பேசி
அலைபேசியில் மனம் பகிர்ந்து
காதலை சொல்லி, கவிதைகள் எழுதி
துயரங்களில் ஆறுதல் கூறி
மகிழ்ச்சிகளில் மனம் ததும்பி
தொடர்பு எல்லையில் துண்டிக்கப்பட்டு
பயண பிரிவுதனில் பரிதவித்து
முகப்புத்தகத்தில் கூடி களித்து
பிறந்தநாள் கொண்டாடி,திரையரங்கில் படம் பார்த்து
சந்திப்புகளில் சண்டையிட்டு,குறுஞ்செய்திகளில் சமாதானாகி
மணிகணக்கில் காத்திருந்து,கொஞ்சும் மன்னிப்பில் மனமிறங்கி
குழந்தையாய் சிணுங்கி,கடற்கரையில் கால் நனைத்து
தோளில் தலை சாய்ந்து,வாகனத்தில் வீடு சேர்த்து
எதிர்காலம் நலம்வாழ,நிகழ்காலம் திட்டமிட்டு
கனவுகள் நிறைவேற காசுபணம் சேர்த்து
நண்பர்களில் ஆதரவோடு பெற்றவர்களிடம் தெரிவித்து
''காதலெல்லாம் வேண்டாம் '' என கூறும்
அப்பாவின் அறிவுரையை புறம் தள்ளி,
''அப்பா உன் நல்லதுக்கு தான் சொல்வார் '' என கூறும்
அம்மாவின் உணவை தவிர்த்து,
காதலிலே மனம் உருகி,தனியறையில் கண் உறங்கி
பிடிவாதமாய் காத்திருந்து ,ஒருவழியாய் சம்மதம் பெற்று
மணவறையில் நிறைவேறும் காதலை போல்,
என்றும் இனிப்பதில்லை..!! உறவுகளிடம் தரகு கூறி
பத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து
சந்தை பொருளாய் பார்க்கவைத்து
''பிடிச்சிருக்கா??? '' பிடிச்சிருக்கு '' என உதட்டளவில் கூறி
என்னை பற்றி எதுவும் தெரியாத யாரோ ஒருவளோடு நானும்
உன்னை பற்றி எதுவும் தெரியாத யாரோ ஒருவனோடு நீயும்
புரிதலின்றி தொடங்கும் சம்பிரதாய திருமணங்கள்,
நம்பிக்கையோடு காதலிப்போம் வா
காலம் நம்மை ஒன்று சேர்க்கும் .....!!!!!!!!!!!!!!!!
Advance valuantines day wishes ....!!!!