அன்பே !அன்பே !என் அன்பே
உன் இதழ் சொட்டும் தேனை
பருகி ஊன் வளர்த்து உயிர்
வாழ்வேன் உயிர்முச்சு நிற்கும்வரை
நீ வெளிவிடும் மூச்சுக்காற்றும்
என் சுவாசகாற்றானது நீ சுவாசித்ததால்...
அனைத்து பிராணங்களும் தவமிருக்கும்
உன் மூச்சு காற்றை சுவாசிக்க
நீ எடுத்து வைக்கும் ஒரு அடிக்கு அந்த
அமைதியே அடிமையாகிவிடும்
இந்த உலகமே இருண்டுவிடும்
அன்பே !உன் இமை மூடும் நேரத்தில்
தேவர் கூட்டம் தரையிறங்கியது
தவபுதல்வியை தவறவிட்டோம் என்று
கார் மேகம் எல்லாம் ஒன்றானது
அன்பே !உன் அடர் கருகூந்தலை காண
உன் சுட்டும் விழி பார்வையால்
அந்த சுடர்வனே சுருங்கிவிடுவான்
வான் நிலா வடம் பிடித்திறங்கியது
அன்பே !உன் அழகு நெற்றியில் குடியிருக்க
வான்மீன்கள் அனைத்தும் உன்
வாய்க்குள் வந்துவிட்டது
பக்கத்திற்கு பதினாறு பற்களாக
அனைத்து மலர்களும் ஆடையானது
அழகி! நீ அணிவாய் என்று
வானவில்லின் ஏழு நிறங்களும்
வளவியாகிவிட்டது
அன்பே !உன் கரம் சேர
தவப்புதல்வன் நானும்
தவித்து தவமிருக்கிறேன்
தங்கமகள் உன் இதயம்
எனும் கோட்டைக்குள் குடியிருக்க !!!!!!!