தந்தை
என் பிறப்பை முதலில் ரசித்தவர் நீரே,
முதல் முன்று வருடங்கள் என்னை
மார்பில் சுமந்தவர் நீரே,
கரம் பிடித்து என்னை பள்ளிக்கு
கூட்டி சென்றதும் நீரே!
அன்று முதல் நான் அடைக்கலம் கண்டது
உம் கரங்களின் இடையே தான்!
துள்ளி திரிந்த காலங்கள்,
என் வாழ்கையின் சிறந்த நேரங்கள்
உம்மோடு இருத்தது மட்டுமே!
முதல் கண்ணீர் உம்மை விட்டு
பிரிந்து தொலைவில் சென்று
கல்லூரியில் சேர்ந்த போதுதான்,
பதினெட்டு வருடங்களாக உம் தோளில்
என்னை சுமந்தீர்,
இனியும் என் வாழ்கை முழுவதும் என்னை
உம் இதையத்தில் சுமப்பீர்,
இவை அனைத்திற்கும் நன்றி மாறாக
நான் செய்வது,
சில வருடங்களுக்கு பிறகு மீண்டும்
நீங்கள் குழந்தையாக மாறும் பொது,
நீர் செய்தது போலவெ உம்மை என் கரங்களின் இடையே அடைக்கலமாக வைத்து சுமப்பேன்!