காத்திருக்கேன் நண்பனுக்காக...

பதில் சொல்
"நண்பனே" இறுகிய
மனதுடன் உன்னால்
மட்டும் எப்படி
"வாழ" முடின்கின்றது.....

உன்னிடம் நான்
நேசித்தது "தோழனே"
என நீ சொல்லும்
ஒரு வார்த்தையைத்தான்...

தினமும் ஆயிரம்
முறை கேட்க
"காதுகள்' துடித்தாலும்
நீ சொல்வது
சில நேரங்களில்
மட்டுமே...

பாசத்தை பகிர்ந்துகொள்ள
"நண்பன்" நீ
இருந்தும் "புரிந்து' கொள்ளாத
மன நிலையில்
இருந்து என்ன லாபம் ...

கை காட்டி வழி
காட்டிய "நீ'' இன்று
"கைகட்டி" நீர்பதேன்?....

நம் பிரிவின்
"வழியை" நீ
உணராதாதலே ...

"பாசம்" மட்டுமே
தெரிந்த என்
"இதயத்துக்கு" உன் வேஷம்
தெரியவில்லையடா....

சோர்ந்து "போன"
நேரங்களில் சோர்வை
நீக்கிய உன்
"வார்த்தைகள்" இன்று
சோகத்தை தந்தது ஏனோ? ....

எதிர் பார்த்த
எதிர் பாராத
தருணங்களில் வந்த
உன் "தொலைபேசி"
அழைப்புகள் இன்று
"தொலைந்து" போனது ஏனோ?....

நினைவுகளை அசை
போட்ட இதயத்தின்
"வலியை" குறைக்க
கண்ணீர் துளிகள்
ஆறுதல் அளிக்கின்றது
அவ்வபொழுது...

காற்றின் எடையை விட
லேசாய் இருந்த
என் இதயம்
கனமானது இன்று
என் "நண்பனின் பிரிவால்"....

அமைதியாய் இருந்த
என் "உள்ளத்தில்"
உன் "நட்பு" எனும்
"புயல்" வீசியதால்
இழப்புகள் எராளம்
ஈடுசெய்ய முடியவில்லை
எஞ்சியது
"நீ" வந்து
போன "கால்"
தடம் மட்டுமே...

உன் "நினைவுகள்"
தந்த வலியால்
துடிக்கும் என்
"இதயத்திற்கு"
கற்று கொடு
"உன்னை" மறக்க
என்னை "மாற்றிக்கொள்ள"
முடியாத செயலுக்கு
"முற்று புள்ளி"
மட்டுமே முடிவு...

கல்லாய் போன
உன் "இதயம்"
கரையுமோ.....
கரையாதோ....
காலம்
மட்டுமே
பதில் சொல்லும்
"காத்திருக்கேன்
என்
நண்பனுக்காக......

எழுதியவர் : சரண் நாக (21-Feb-12, 5:32 pm)
பார்வை : 368

மேலே