எழுத்து உலக அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.
காணவில்லை சாலையை !!!!!
சில சமயம் சாலையில் குழி
தற்போது குழிக்குள் சாலை
தேடுகின்றனர் ஓட்டுனர்கள்
வாகனத்தை செலுத்த
திணறுகின்றனர் ஓட்டுனர்கள்
வண்டியை வளைவில் திருப்ப
!!!ஒரு தாயின் கதறல் !!!
தவமிருந்து பெற்ற பிள்ளையாம்
தாயுடன் சண்டையிட்டு
தவணை முறையில்
வாங்கிய வண்டியாம்
வேலை பார்த்து -வீடு
திரும்பும் வேளையில்
பள்ளத்தை பார்த்து
இடப்பகமிருந்து வலப்பக்கம்
ஏறி வந்துவிடலாம்
என நினைத்தானாம்
நினைத்த இடத்திலும் ஒரு பள்ளம்
ஏறி இறங்குவதற்குள்
எதிரே வந்த வண்டி மோதியதில்
தலைகவசம் இருந்தும்
சிதறியது தலை
பாவி மனசு பதறுகிறது !!!!
குழி மிகுந்த சாலையில்
தடமாறுகிறது வாகனங்கள்
தடுமாறிய ஓட்டுனர்கள்
குழியில் விழுந்த எழுவதற்குள்
தாறுமாறாக மோதுகிறது
சிலர் இறக்கின்றனர்
பலர் படுகாயமடைகின்றனர்
அடுத்த நாள் செய்திதாளில்
பார்த்து பதறுகிறது மனம்
சுங்க வரியாம் -சுரண்டுகின்றனர்
சுரண்டியதை விழுங்குகின்றன
சில திமிகல்ங்கள்- அமைக்கின்றனர்
தேசிய நெடுஞ்சாலையை
வட்ட வட்டமாக
மீண்டும் வட்டம் குழியானது
(நாங்கெல்லாம் ஒரே குட்டையல
ஊறின மட்டையில்ல விடுவோமா )
(கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில அதுவும்
எங்க கிராமத்திலே நடந்த
சில உயிர்களின் ஆத்மா சாந்தியடைய
என் கண்ணீர் அஞ்சலி )
மொத்த தேர்வு :
Loading...
x எழுத்து குழுவிற்கு தெரிவிக்க
நீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.
Sexual ContentViolent or Repulsive ContentHateful or Abusive ContentHarmful Dangerous ActsChild AbuseSpamInfringes My Rights
எழுதியவர் :ப்ரியாராம்
நாள் :21-02-2012 03:25:52 PM
Added by :priyaram
பார்வை :௩௩
*************************
ப்ரியாவிற்கு மீண்டும் நன்றி.
இது போன்ற சமூக அவலங்களை / சமுதாய கோபங்களை என்னால் கவிதை வடிவில் அலங்கரித்து எழுத தெரியாது - அதே நேரத்தில் இது போன்ற விசயங்களுக்கு ஆதரவு கொடுத்து - தமிழ் வளர்ச்சியோடு சமுதாய மேம்பாட்டிற்காகவும் இத்தளத்தின் மூலம் நேர்மையான முறையில் போராட எழுத்து உலக அன்பர்களுக்கு வேண்டுகிறேன் - நன்றி - மு.ராமசந்திரன்.