!!! சொல்லடி பெண்ணே !!!
மனதில் உன்னை
நினைத்தது தவறா?
கனவில் உன்னுடன்
வாழ்ந்தது தவறா...???
உயிரில் உயிராய்
கலந்தது தவறா?
உனக்குள் என்னை
தொலைத்தது தவறா...???
உனக்கென நானும்
சிரித்தது தவறா?
என்னுடன் வாழ
அழைத்தது தவறா...???
உனக்காக காத்து
கிடந்தது தவறா?
உனது பிரிவில்
அழுதது தவறா...???
காதலை என்னுள்
மறைத்தது தவறா?
கண்ணுக்குள் உன்னை
வைத்தது தவறா...???
உன்னை காண
துடித்தது தவறா?
உனது சிரிப்பில்
மகிழ்ந்தது தவறா...???
உன்னை தேடி
அலைந்தது தவறா?
உனக்காய் விலகி
நின்றது தவறா...???
எது தவறென்று
சொல்லடி பெண்ணே
என்னுயிர் எனைவிட்டு
பிரிந்துடும் முன்னே...!!!