மாப்பிள்ளை வீட்டாரே !!!
ஜாதி ,மத ,ஜாதகம்
என்னும் சனியை தொலைத்து
பணம் என்னும் பந்தத்தை
பாராமல்,
அன்பு என்னும் -அறிவு
கண்ணை திறந்து
குடும்ப தாரகையான
குணத்தில் சிறந்த
குத்து விளக்கை தேடுங்கள்
பெண் கிடைக்கவில்லை -என
வருந்தும் மாப்பிளை வீட்டாரே !!
அப்போது கிடைப்பாள்
அழகிய தமிழ் மகள் -உன்
அன்னைக்கு நல்ல மருமகள்
உனக்கு நல்ல மனைவி
உன் குடும்பத்திற்கு ஒளி
உண்டாக்கும் குலவிளக்கு !!!.....