காதல் செய்தேன் கவிஞனானேன் ...........!

எனக்காக பிறந்தவளே
என்னை ஏன் மறந்தாய் ....?
உன்னை பார்க்கின்ற போதல்லாம்
என்னை பார்க்க மறுக்கின்றாய் ...........!

நீ மணம்முடித்த முதல்நாள்
நான் மயக்கத்தில் நின்றேன்
மறுநாள் மயக்கம் தெளிந்தேன்
ஆனால் உன்னை காணவில்லை ...........!

ஓராண்டு கழிந்து
நீ-ஒரு குழந்தையுடன் வந்தாய்
நான் தாடி மீசையுடன் நின்றேன்
என்னை கண்டு பைத்தியமென்று
சொன்னாய்...........!

உன்னால் இந்த பைத்தியம் எழுதிய
கவிதைகளை எழுத்து.காமில்
பதிவுசெய்தேன்-என்னை
கவிஞனென்று கைதட்டி சிரிக்கிறது ...........!

ஆனால் உன் கை-குழந்தையோ
என்னை பைத்தியமென்று
கைகாட்டி சிரிக்கிறது ...........!

இந்த பைத்தியத்திற்கு
காரணம் நீதானென்று
அந்த குழந்தைக்கு தெரிந்தால்
நான்தான் அப்பனென்று
அழுது புலம்பும் ...........!

எழுதியவர் : கதிரேசன் (2-Mar-12, 10:40 am)
பார்வை : 213

மேலே