என்னவளை பற்றி...

சித்திரமும் பேசுதடி நமக்குள் மௌன மொழி, என்
செல்லமே நீ பேசாதது எனக்குள் மரண வலி…

கவிஞர்களும் கை விரிப்பார்கள் உன்
பேரழகை எழுத முடியாமல்…

வித்தகர்களுக்கும் விடை தெரியாது உன்
விழி கேட்கும் கேள்விகளுக்கு…

புவி ஈர்ப்பு விசையை விட வலிமையானது
உன் விழி ஈர்ப்பு விசை…

என் நாவினிலே தேன் பட்டால் தேன் சுவை தெரியும்,
உன் நாவினிலே தேன் பட்டால் தேனும் சுவை அறியும்…

உனக்கு ஆசை என்னை கல்லறையில் தாலாட்டு பாட,
எனக்கு ஆசை உன்னை கதவறையில் தாழிட்டு பாட…

எழுதியவர் : மயிலை பிரபு (2-Mar-12, 10:35 am)
சேர்த்தது : mylaiprabhu
பார்வை : 287

மேலே