கை குலுக்கி வரவேற்க கைகள் உண்டு
காலைக்கு நாளின் கதவினை
திறக்கும் அழகிய வாசல் உண்டு
காற்றுக்கு இன்னிசை பாடிவரும்
இனிய பாடல்கள் உண்டு
மாலைக்கு அழகிய நிலவுண்டு
நிலவுதரும் காதல் கவிதைகள் உண்டு
மலர்தோட்டத்திற்கு தென்றல் உண்டு
மொட்டவிழ்க்கும் தேன் மலர்களுண்டு
உனக்கு உன் முன்னே மலர்ந்து விரியும்
அழகிய இனிய வாழ்க்கை உண்டு
அதை மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வரவேற்க
இனிய இரு கைகள் உண்டு
---கவின் சாரலன்

