சுமந்து வந்த சுமை

சுமந்து வந்த
சுமைகளோடு - சோகத்தையும்
இறக்கத்தவிக்கிறேன்
எல்லா முகமும் அன்னிய முகம்
எங்காவது தமிழ் முகம் கண்டால்
சொந்தஊர் குலசாமி மீன்கொழம்பு
சொந்த பந்தம் பற்றி பேசுவதுண்டு
கடல் கடந்து இருக்கும்
சொந்த பந்தகளுடன் பேசும்போது
யதார்த்தமாய் தொடர்பு அறுந்தாலும்
என்ன நடந்தது என்று பதருவதுண்டு
எப்போதாவது நினைப்பதுண்டு
சொந்தஊரில ஆடு மாடு மேய்ச்சவது
பிளைச்சிருக்கலமனு

எழுதியவர் : sruban (5-Mar-12, 10:49 am)
பார்வை : 255

மேலே