சுவாசத்தின் சூடு..

கனா ஒன்று கண்டேன்.. கனா ஒன்று கண்டேன்..
என் நினைவுகளை நிஜமாக்கும் ... கனா ஒன்று கண்டேன்..
என் உணர்வுகளை உரிமையாக்கும்.. கனா ஒன்று கண்டேன்.. ..

கண்டதை கூறினால் பலிக்குமா என் கனவு ?
பலிக்காவிட்டாலும் பரவாயில்லை..
படரும் பரிதவிப்பு பலமிழந்தால் சரி..

கண் மூடி உடல் உறங்கையில் ... கனா ஒன்று கண்டேன்..
அதென்ன உடல் உறங்கையில் ..?
உள்ளம் உறங்க உன் அனுமதி வேண்டுமன்றோ .....

காரிருள் மேகத்திலே வெள்ளி நிலாவாய்
என் இதயத்தில் காதல் ஒளிர கண்டேன்..
என் சுவாசத்தின் சூடு சுகமான காரணம்
என் இதயத்தின் பள்ளங்களில் உன் நினைவு..

சுவாசத்தின் சூட்டை ஊர் காய்ச்சல் என்கிறார்கள்..
அது உன் பேர் காய்ச்சல் என்று எப்படி புரியவைப்பது..
ஒரு நொடி பொழுதினிலே மெல்ல உன் நினைவு மலர கண்டேன்..
மலர்ந்தாலே மகிழ்ச்சிதானே...

உள்ளத்தின் பூரிப்பு உதட்டில் வெளியானதே..என்னையும் அறியாமல்
தூக்கத்தில் உலறியதாம் என் உதடு உன் பெயரை...
உணராமல் உளறவில்லை.. உரிமையுடன் உறுமியது..
எனக்கு மட்டும் தானே தெரியும்..

உன் நினைவுகளை என் நிம்மதியாக்கி..
ரத்தத்தில் சிவப்பு அணுக்களாய் உலவ விட்டு இருக்கிறேன்..
உன் நினைவு இருக்கும் வரை என் நிம்மதி இருக்கும்..
இது குறைந்தால் சுயநினைவு இழப்பேன்...
இதை இழந்தால் என்னையே இழப்பேன்..

என் காதல் ஜெயிப்பது நிஜம்.. எனக்கு தேவை உன் சம்மதம்..
இவ்வுலகில் இன்னுமொரு வெற்றி காதலர்களாக..
வாழ்க்கையில் நுழைய அழைக்கிறேன்... வருவாயா !!!!
முடிவு உன் எண்ணத்தில்....

இதை படித்ததும் ஏற்று கொண்டால் .....
" காலமெல்லாம் காதலிப்பேன் "..
சிரித்து கொன்றால் .....அப்போதும் என் முடிவில் மாற்றமில்லை..
காலமெல்லாம் காதலிப்பேன்... கனவிலும்... கற்பனையிலும்...

எழுதியவர் : கலிபா சாஹிப் (10-Mar-12, 12:30 pm)
பார்வை : 770

மேலே