யார் இங்கே செல்வச் சீமான் ?
என் குடிசை வாசலில்
இரண்டே இரண்டு அடி வெற்றிடம்...!
நாயகுடைகளே தென்னம் தோப்பு
நத்தைக் கூடே பண்ணை வீடு
பாசம் புடிச்ச கூழாம் கற்களே
பசும் புல்வெளி....
சிலந்தி வலைகளே மின் வேலிகள்
சிறு எறும்புகளே காவல் காரர்கள்..
அண்ணாந்து வானை பார்க்கிறேன்
அன்பு செலுத்தும் விண்மீன்கள்...
அடடா உலகம் எத்தனை இனிமை ?
துருப் பிடித்து இருந்தது என் பணப் பெட்டி
கஞ்சிக் கலயத்துக்குள் அமுத பானம.....
நிம்மதியான சந்தோஷ உறக்கம்
எனை விட்டால் யார் இங்கே செல்வச் சீமான் ?

