காதலர்களே

காதல் உண்மையானது.
காதலர்கள் உண்மையானவரை
ஏமாற்றி விட்டார் என்று பிதற்றி திரியும்
பெண்களே!ஆண்களே!
மனந்தொட்டு பாருங்கள்
ஏமாற்றம் யாருக்கு
ஏமாறுவது காதல் என்று
உங்களுக்கு புரியும்

உங்களை அழிக்கவில்லை காதல்
காதலை அழிக்கிறீர்கள் நீங்கள்
உங்கள் வாழ்வு கெடவில்லை காதலால்
காதல் கெடுகின்றது உங்களால்
இறந்தும் இறக்காத காதலர் கல்லறைகளை
கண்ணீர் விட வைக்கின்றீர்
காவியங்களின் உண்மைக் காதலை
காணாமல் செய்கின்றீர்

எம் சாவிலும் நம் காதல் வாழுமென
உயிர் விட்ட
காதலர் வாழ்ந்த தேசத்தில்
அற்ப ஆசைக்கும் சொற்ப சுகத்துக்குமாய்
காதலை இலங்துவிடு்
கல் கயவராய் வாழ்கிறீரே

காலக் கணக்கில் வாழ்ந்த காதல்
கணப்பொழுதில் எப்படித்தான்
காணாமல் போகிறதோ
கண்ணா!கண்ணே! கவிதை
கதை கதையா வசனம்
கட்டுக் கட்டா கடிதம்
கடைசியில் கனவு போல மறந்துவிட்டு
காண்பவரை கல்யாணம் கட்டி
காதலுக்கு சமாதி கட்டுகிறீர்

சேர்ந்து வாழ காதலிச்ச காலம் போய்
காதலிச்ச கட்டாயத்துக்கு சேர்ந்துகிட்டோம்
பேசினதை செய்திருந்தா
எப்படியோ வாழ்ந்திருப்பேன்
இப்படித்தான் இன்று காதல்
சேருவோம் வாழுவோம் முடிவிருந்தா காதலியுங்கள்
அணுவளவு ஐயமிருந்தாலும்
தயவு செய்து வேணாமே

ஒருவர் இருவர் காதலிக்காம
காதல் ஒன்றும் கலங்காது- ஆனால்
ஒருகாதல் பிரிந்தாலும்
காதல் கலங்கப்படும்
காதலை வாழவைக்காவிடினும்
சாகடிக்காதீர்கள்

எழுதியவர் : chandhrika (21-Mar-12, 4:25 pm)
பார்வை : 206

மேலே