உதவி இயக்கம்

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகில் உள்ள அயூப்கான்புரம் என்ற கிராமம் தான் தமிழ் செல்வத்திற்கு வீட்டிற்கு ஒரே பிள்ளை ஆனால் இரட்டை குழந்தை ஆம் ஒன்று அவனும் மற்றென்று அவனின் வறுமையும் ..அப்பா விவசாயம் அம்மா ,நாத்து நடுவதில் இருந்து களை எடுப்பதிலிருந்து நெல் களத்திற்கு வருவது வரை எல்லா வேலையும் பண்ணைக்கு செய்யக்கூடியவள் வெகுளி அம்மாவின் சிக்கனத்தால் தமிழ் லிட் பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான் தமிழ் செல்வன் அது மட்டு மில்லை நல்ல கதா ஆசிரியர் ,கவிதை படைப்பாளி ,ஆனால் அத்தனையும் காகிதத்தில் சிலந்தி தொட்டில்கட்டி தூசுகள் கொசுக்களோடு தூங்குகிறது .....
அதே ஊரில் வசிப்பவன் ரவி கண்ணன் வசிதியானவன் அவனை புகழ்ந்தால் போதும் எதையும் கொடுத்துவிடுவான் புகழுக்காகவே வாழ்பவன் ..அந்த ஊரில் ஒரே ஒரு டீ கடைதான் டீ குடிப்பவர்களைவிட தினசரி பேப்பர் பார்ப்பவர்கள்தான் அதிகம் ..........
தமிழ் செல்வனின் வறுமை பார்த்தால் ... ஒரே ஒரு பள்ளி சீருடைதான் அதிலும் அங்கே அங்கே ஆயிரம் ஜன்னல்கள்... அவன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ,,அவன் படிக்கும்போதே சின்ன சின்ன வயல் வேலைக்கு செல்வான் வரப்பு வெட்டுவது ,தண்ணீர் பாய்ச்சுவது ,சோளகாட்டுக்கு காக்க கிளி விரட்டபோவது இப்படி பல வேலைகள் செய்வான்,ஒரு நாள் அவன் பள்ளியில் ஆண்டுவிழா சிறுகதை எழுதுதல் கவிதை போட்டி எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு மதியானம் சோள காட்டுக்கு காக்க விரட்ட வந்துவிட்டான் ..மாலை நேரத்தில் பள்ளியில் பரிசுகள் அறிவிக்கப்படுகிறது அதில் முதல் பரிசு தமிழ் செல்வன் என வாசிக்கப்படும்போது தமிழ்ச்செல்வன் சோள காட்டில் ஹோ ..ஹோ என காக்க விரட்டி கொண்டு இருக்கிறான் கால் சட்டையில் பின்னால் மறைக்க வேண்டிய இடத்தில் ஜன்னல் இருந்ததால் அதுவழியாக கட்ட எறும்பு ஒன்று நுழைந்து கடித்து கொண்டு இருக்கிறது.. 'ஏலே தமிழ் பள்ளிகூடத்தில ஒ பெயரு பரிசுக்கு வாசிக்கிறாங்க தமிழ் டீச்சர் "என்று நண்பனின் குரல் கேட்டு ஓடுகிறான் தமிழ் செல்வன் ஆனால் கால் சட்டை கிழிந்து இருக்கு தன் நண்பனின் கால் சட்டை மாற்றி பள்ளி சென்று பரிசுவாங்கினான் ....
சரி கதைக்கு வருவோம் அன்று தினசரி பத்திரிக்கையில் ஒரு செய்தி சிறந்த கதைக்கு பரிசும் பாராட்டும் என்ற செய்தி ... தமிழ் செல்வனிடம் நல்ல கதையிருக்கு அந்த முகவரிக்கு செல்ல பேருந்து கட்டணம் கிடையாது யோசித்து கொண்டே இருந்தான் இந்த விளம்பரத்தை ரவிகன்னனும் பார்த்தான் .பாராட்டிற்காக அதில் கலந்து
கொள்ள விரும்பினான் ஆனால் கதை எதுவும் இல்லை உடனே தமிழ் செல்வன் வீட்டிற்கு சென்று தமிழ் செல்வன் அம்மாவிடம் கொஞ்சம் பணம் கொடுத்து பேப்பர் தானே என்று அவன் அம்மாவும் கொடுத்துவிட்டார் இதற்கிடையில் தமிழ் செல்வன் வீட்டற்கு வந்து விட்டான் ..அம்மாவின் கையில் பணம் வாயில் புன்னகை ஒரு நேர சாப்பாட்டிற்காக உதவும் என தன் மனதை தேர்திக்கொண்டான் தமிழ் செல்வன் ....கதையை எடுத்த்க்கொண்டு சிட்டாய் பறந்தான் ரவிகண்ணன் ....
தன் கையில் இருந்த பணத்தில் பத்து ருபாய் எடுத்து இந்தாப்பா தமிழ் என்று அவனின் அம்மா கொடுத்தால்
பக்கத்தில் உள்ள பட்டணத்திற்கு போகிறேன் அம்மா என செல்லி கொண்டே போனான் ..சரிப்பா அம்மாவுக்கு வெத்தலை பாக்கு மட்டும் வாங்கிவாப்பா என அவனின் அம்மா சொல்லி அனுப்பினாள்
பேருந்தும் வந்தது ஏறி அந்த போட்டி நடக்கும் இடத்திற்கு பயணச்சீட்டு வாங்கி இருக்கையில் அமர்ந்து கதை எழுத ஆரம்பித்தான் கதை எழுதியும் முடிந்தது அவனின் இறங்கும் இடமும் வந்தது போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தான் " அட என்னடா சொல்லிருந்தா என்கூட வண்டியில் கூப்பிட்டு வந்திருப்பம்லே சரி இங்கே உன் கதை என்று யாரிடமும் சொல்லிவிடாதே "என ரவிகண்ணன்
காசு வாங்கி கரைந்து போனது எப்படி சொல்வேன்" என்றான் தமிழ் செல்வன் இருவரும் சென்று நடுவர்களிடம் கதைகளை சமர்பித்தனர் கூட்டத்திற்கு நடுவினிலே .........
எல்லா கதைகளையும் படித்து முடித்து முடிவுகள் வாசிக்கப்படுகிறது முதலில் மூன்றாம் இடம் வாசிக்கப்படுகிறது..முதல் ,இரண்டாவது இடத்தை தேர்வு செய்வதில் நடுவர்களிடையே குழப்பம் ஏன் என்றால் இரண்டுமே தமிழ் செல்வன் எழுதியது ஆனால் நடுவருக்கு தெரியாது
ரவி கண்ணன் .தமி செல்வன் இருவரையும் அழைத்து நீங்கள் யாராவது முதல் இடத்தை விட்டுக்கொடுங்கள் என்றனர் நடுவர்கள் ,ரவி கண்ணனுக்கு புகழ் மீது மட்டும் விருப்பம் அதனால் முதல் இடத்தி விட்டுக்கொடுக்க விருப்பம்மில்லை தமிழ் செல்வன் மனதிற்குள் நான் இங்கே வர காரணமே அந்த கதைதான் மேலும் காசு வாங்கி விட்டோம் என முதல் இடத்தி ரவிகன்னனுக்கு கொடுத்துவிட்டான்.....
முதல் வந்த கதையை ஒரு தயாரிப்பாளர் வந்து ரவி கண்ணனிடம் இதை படமாக எடுங்கள் என்றார்
உதவிக்கு இரண்டாவது வந்த தமிழ் செல்வனை உதவி இயக்குனராக் வைத்துக்கொள்ளுங்கள் என்றார் .................

எழுதியவர் : தபரேஜ் (26-Mar-12, 11:40 am)
பார்வை : 434

மேலே