அவசியம்

உலக வாழ்க்கை
மகிழ்ந்து வாழவா ? இல்லை
வாடி வதங்கி
வாழ்வற்று வதைக்கவா ?

எல்லா மக்களையும்
எல்லையில்லா கவலைகள்
எப்படி படுத்துகிறது
பண பிரச்சனையாக
மன பிரச்சனையாக
பண்பாட்டு பிரச்சனையாக
பாலும் அரசியல்
படுத்தும் செயல்களால் (விலைவாசி)
நம் பந்தங்களாலும் சிலநேரம் !

கவலையில் மூழ்கி
கண்ணீர் விட்டு
காலம் தள்ளுவதை விட
கவலையை காக்கும்
கபடமற்ற சிரிப்பு அவசியம் !

என்றும் அன்புடன் "நட்புக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (3-Apr-12, 3:03 pm)
பார்வை : 277

மேலே