நட்பு

இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு

துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு

தயக்கத்தில் கைகொடுக்க நட்பு

புகழ் எதிர்பார்க்காதது நட்பு

சுயநலம் தெரியாதது நட்பு

தலைக்கணம் இல்லாதது நட்பு


குழந்தையில் விளையாடிட நட்பு

இளமையில் குறும்புகள் செய்திட நட்பு

முதுமையில் கலந்துரையாடிட நட்பு

உனக்கு உறவாக வாழ்வது நட்பு

உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு

உனக்கு உறுதுணையாக நிற்பது நட்பு

உன்னை மனிதனாக்குவதும் நட்பு

உன்னை உணரவைப்பதும் நட்பு

உன்னை உயர்த்துவதும் நட்பு

நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு

தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு

குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு

உன் நண்பர்களை புரிந்துகொள்,

நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்

எழுதியவர் : (17-Sep-10, 4:50 pm)
சேர்த்தது : Bhavani
Tanglish : natpu
பார்வை : 536

மேலே