என் தோழி தமிழ் !
குழந்தையாய்...சிறு வயதிலேயே....அம்மாவின் கை பிடித்து ...'அ'...'ஆ'..... என்று பல்பதினால் அழுத்திய காலங்களிலிருந்தே ...தமிழ் என்றால் தனி பிடித்தம் தான்...
சிறுமியாய்...பள்ளியில்......உரைநடையுமாய் ,செய்யுளுமாய்..தமிழும் எனக்கு நெருங்கிய தோழியானது....
வள்ளுவன்,பாரதி,பாரதிதாசன் என்று....எண்ணிலடங்கா கவிப்பேரரசர்கள்....மாய்ந்த பிறகும் ...தமிழை அழகாக ஆண்டுக்கொண்டிருக்கிரார்களே!!!!
நாட்கள் வருடங்களாக உருண்டோட....எட்டாம் வகுப்பினில்.....தமிழ் மீதுள்ள இச்சை பன்மடங்காது....
வகுப்புகள் ஏற ஏற ..தமிழும் .....அறிவியல்,வரலாறு என்று ஒரு பாடமாகவே மாறி போய் இருந்தது....
பத்தாம் வகுப்பினில்.....என் தமிழை....என் சிந்தனையை...... பிடுங்கி எடுத்து....கோனார் தமிழ் உரை மூலம் மட்டுமே பரிட்சயம் செய்தார்கள்....
அது ஏனோ!!பனிரெண்டாம் வகுப்பினில்...
டாக்டர் என்று தாய் சொல்ல,இஞ்சினீயர் என்று தந்தை மனக்கோட்டை கட்ட.....இயந்திரத்தனமாய் நானும் அறிவியல்,கனிதம் என்று வரி வரியாய்....மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன்....என்னுள் ஒன்றி போய் இருந்த தமிழை ...மறந்து தான் போனேன்...
கன்னியாக..கல்லூரி நாட்களில் வலம் வருகையில்...
தமிழின் சுவடு...குமுதம் குங்குமம் என்று அதில் வரும் துணுக்குகளின் மூலம் ..."ஹை.. பை"தோழியாகவே மட்டும் பரிட்சயம் கொடுத்தது....
மனைவியாக..இன்று....என்னவனுக்கு சொல்லும் குட் மார்னிங் முதல் ....அலுவலகத்தில்....கனினியில் டைப் அடிக்கும் ப்ரோக்ராம்மிங் கோட் வரை ..அனைத்துமே ஆங்கில மயம்தான்........
இப்படியாக நாட்கள் செல்ல...ஒரு நாள்...
ஏதோ விண்ணப்பத்தில் ...'தமிழில் நிரப்புக' என்ற கருப்பு நிற பளிச் பளிச் வரிகள் என்னை பார்த்து சிரிதுக்கொண்டிருந்ததன ....
என் முகவரியை அதில் எழுத முயற்சிக்க...எழுதிய வார்த்தைகளின் பிழைகள்....' தமிழின் முகவரியை முழுவதுமாய் தொலைத்துவிட்டாய்...' சுளீரென்று கன்னத்தில் அறைந்தது.......
தமிழ் என்னிடமிருந்து பல நூறு மைல்கள் தூரம் சென்றுவிட்டதை எண்ணி மனது அழுதுகொண்டு இருந்தது....
அந்த வலியின் பிரதிபலிப்பாக....
என்னை விட்டு பிறிந்த என் தமிழ் தோழியை எனக்குள் தேடி கண்டெடுத்து....
இதோ ..... உயிர்ப்பிக்கும் முயற்சியில்....