நான் உன் முன்னே வருகிறேன் ...............

ஆசை தீர ஆசை தீர
என் முன்னே நீ வந்து சென்றாய் .......

நெஞ்சம் குளிர
அச்சம் விலக
ஏனடி என்னை
என்ன செய்தாய் .............

கண்கள் காணாத
கோடி அழகை
எந்தன் கனவில்
கண்டு கொண்டேன் ............

கனவில் கண்ட
அழகு தேவதையை
நேரில் கண்டு
அழகில் மயங்கி விட்டேன் ........

மெளனமாய் இருந்த
எனது ஜன்னலுக்குள்
காற்று வந்து
வீச கண்டேன் .........

ஒரு முறைக்கு
இரு முறையாய்
யோசித்து செய்யும்
செயல்கள் எல்லாம்
செயல் இழந்து
உன் பின்னே
போக கண்டேன்

மறக்க செய்யும்
நரம்புகள் எல்லாம்
உன்னை நினைக்க
சொல்லி துண்டுதே .........

இறக்க செய்யும்
செல்கள் எல்லாம்
மீண்டும் பிறந்து
உயிர் வாழுதே ..........

silent டாக இருந்த
இதயம் இன்று
vibrate டாகி துடிக்கிறது ..........

யாரிடமும் சொல்லாத
வார்த்தை
உன்னிடம் சொல்ல
நினைக்கிறேன்............

ஆசை தீர ஆசை தீர
என் காதல் சொல்ல
நான் உன் முன்னே
வருகிறேன் ...............

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (7-Apr-12, 11:57 am)
சேர்த்தது : jgmagesh
பார்வை : 284

மேலே