பைத்தியக்காரனாய் வாழ்ந்துவிடலாம்

)))))) கட்சி வேட்டி கட்டிக்கொண்டு
களவு செய்யும் ஒருகூட்டம் >
)))))) காக்கி உடையில் மிரட்டிநின்று
பிச்சை கேட்கும் ஒருகூட்டம் >
)))))) காவி உடையினை அணிந்துகொண்டு
கற்பை பருகும் ஒருகூட்டம் >
)))))) காவி அணிந்தவன் கடவுளென்று
கற்பை இழக்கும் ஒருகூட்டம் ;


)))))) தன்னைத்தானே புகழ்பாடும்
தலைக்கனம் கொண்ட ஒருகூட்டம் >
)))))) தன்குற்றம் தானும் பொறுக்காமல்
பிறர்குற்றம் பேசும் ஒருகூட்டம் >
)))))) நல்லவன் என்றே நிலைநிறுத்த
நாளும் முயலும் ஒருகூட்டம் >
)))))) ஊருக்குமட்டும் உபதேசிக்கும்
ஒழுக்கம்கெட்ட ஒருகூட்டம் ;


)))))) மிரட்டல்விடுத்தே தன்னடியில்
அடிமைபடுத்த ஒருகூட்டம் >
)))))) பயந்து அவனது காலைப்பிடிக்கும்
பக்குவமற்ற ஒருகூட்டம் >
)))))) தானே பெரியவன் என்றுரைத்து
தற்பெருமை கொள்ள ஒருகூட்டம் >
)))))) தன்னை உயர்த்தி சொன்னவனை
தலையில் தூக்க ஒருகூட்டம் ;


)))))) தானும் பெண்ணென உணராமல்
மருமகளை சிதைக்கும் ஒருகூட்டம் >
)))))) மறு தாய் என்று கூறிவிட்டு
மாமியாரை வதைக்கும் ஒருகூட்டம் >
)))))) பெண்ணவள் என்ன செய்தாலும்
பெருமை பேச ஒருகூட்டம் >
)))))) பெண்ணை கவரும் வழிதேடி - தினம்
பேயாய் அலையும் ஒருகூட்டம் ;


)))))) கடவுள் வேஷம் இட்டுக்கொண்டு
காசுபறிக்கும் ஒருகூட்டம் >
)))))) மனிதனை கடவுளாய் நினைத்துக்கொண்டு
காசை இழக்கும் ஒருகூட்டம் >
)))))) பசித்தவனுக்கு ஒருவேளை
உணவிட மறுக்கும் ஒருகூட்டம் >
)))))) பாறாங்கல்லுக்கு பட்டையிட்டு
படையல் போடும் ஒருகூட்டம் ;


)))))) தனக்கே விளக்கம் தெரியாமல்
விளக்கம் சொல்லும் ஒருகூட்டம் >
)))))) விளக்கம் ஏதும் புரியாமல்
ஆமா போடும் ஒருகூட்டம் >
)))))) புகழ்ச்சியை மட்டும் ஏற்றுக்கொண்டு
இகழ்ச்சியை பழிக்கும் ஒருகூட்டம் >
)))))) இகழ்ச்சியை கண்டு அஞ்சிதினம்
எழுந்திட மறுக்கும் ஒருகூட்டம் ;

)))))) மாசில்லாத மனைவியை விட்டு
வேசியை தேடும் ஒருகூட்டம் >
)))))) கட்டிய கணவனை ஏமாற்றி - கள்ள
காதலன் தேடும் ஒருகூட்டம் >
)))))) எவனும் எங்கனம் போனால் என்ன
என்றெண்ணி வாழும் ஒருகூட்டம் >
)))))) அடுத்தவன் வளர்ச்சி பொறுக்காது
அடிவயிற்றை எரிக்கும் ஒருகூட்டம் ;

)))))) தன்னைத்தானே புகழ்ந்துகொண்டு
தற்பெருமை தினம் பேசிக்கொண்டு >
)))))) அடுத்தவன் வயிற்ரை அடித்துத்தின்று
அவனை பைத்தியம் ஆக்கிக்கொண்டு >
)))))) தன்னிலை தாழ்த்தி வருந்திக்கொண்டு
ஜால்ரா அடித்தே பிழைத்துக்கொண்டு >
)))))) கேவலமான வாழ்க்கை வாழும்
வாழ்வும் இங்கே தேவைதானா ?


)))))) இதிலே எந்த நிலையென அறியாது
தன் மனநிலை பிறருக்கும் புரியாது >
)))))) எவனிடம் பணிவதும் கிடையாது
ஏய்த்து பிழைக்கவும் தெரியாது >
)))))) அடித்தால் அழுது அணைத்தால் மகிழ்ந்து
தன் நினைவும் தனக்கு அறியாது >
)))))) குழந்தை மனதை கொண்டே வாழும்
பைத்தியக்காரனாய் வாழ்வதே மேல் !!!!!

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா.. (11-Apr-12, 8:09 pm)
பார்வை : 392

மேலே