முற்று பெறாமல்...

அன்று ஒரு நாள்
காலை பொழுதில்
சூரியோதயத்தையும்
என் கவிதையும்
வடிக்கும் எண்ணத்தில்
கடற்கரைக்கு சென்றேன்.
சில வரிகளும்
பல எண்ணங்களும்
என் நேரத்தை
போக்கி கொண்டுருந்தன.
சற்று பலத்த ஓசையுடன் கடல்
அலை என் மரணத்தை
சொல்லி சென்றது.
ஒரு தாயிலிருந்து பிறந்த
என்னை
கடல் அன்னை
உள் இழுத்து கொண்டாள்.
இக்கவிதை போல்
என் வாழ்வும்
முற்று பெறாமல்
போயிற்று...

எழுதியவர் : சிவானந்தம் (11-Apr-12, 9:11 pm)
சேர்த்தது : சிவானந்தம்
பார்வை : 205

மேலே