வீரனாக ஒருநாளாவது வாழ்
கோழையாய் ஆயிரம் நாட்கள்
வாழ்வதை விட
வீரனாய் ஒரு நாள் வாழ் !
இதயத்தை பலமாக்கி ,
துணிவை துணையாக கொள் ,
நியாயத்திற்கு மீசையை முறுக்கு ,
நீதிப்படி வாழ் ,
நெஞ்சை நிமிர்த்தி ,
தனி மனிதனாக துணிந்து நில் ,
பயத்தை தூள் தூளாக்கு,
வீரனாய் ஒரு நாள் வாழ் !
இருட்டு பயத்தை
விலக்க கற்றுக்கொள் ,
உன் தாயின் கருவறை
ஆரம்ப பாடம் ,
வீரனாய் ஒரு நாள் வாழ் !
ஜாதி என்ற நோய்
ஊரையே சப்பிட பார்க்கிறது ,
இறப்பு பிறப்பில் கூட
மனிதநோடவே போகும்
இந்த மரபற்ற நோயை மாற்று ,
வீரனாய் ஒரு நாள் வாழ் !
லட்சியத்தின் எதிர்காலத்தை ,
லஞ்சங்கள் அழிக்கிறதே ,
அரசியல் கூட்டத்தோடு
அதிகாரிகள் கூட்டமும் ஆட்டம் போடுது ,
அகிம்சை வழியில் போராட
இது அறப்போராட்டம் அல்ல ,
இந்த வீணர்களின் நெஞ்சில் வேலை பாய்ச்சு ,
உலகம் திரும்பும் ,
உலகம் திருந்தும் ,
வீரனாய் ஒரு நாள் வாழ் !
அலுவலகம் செல்லவேண்டிய
இளைஞர் கூட்டம் ,
அலைமோதி சண்டையிட்டு கொண்டிருக்கிறது
பார்களின் வாசல்களில் ,
இந்தியாவின் நேசக்காற்றை சுவாசிக்கவேண்டிய
மூச்சுகுழல்கள் ,
புகை பிடித்து புன்னாகுகின்றன ,
இந்தியாவின் இதயத்தையும் விரைவில்
புகை புற்றுநோய் பற்றி கொள்ளும் போலும் ,
போதனைகள் கற்று கொடுக்க
விளம்பரமில்லை ,ஆனால்
போதைக்கு எத்தனை விளம்பரங்கள் ,
இவன் ஒருவீட்டின் விளக்கெரிய
அணைந்த அடுப்புகளின் எண்ணிக்கையோ
ஆயிரம் ஆயிரம் ,
வீரனாய் ஒரு நாள் வாழ் !
நாகரீக கலாசாரம்
பசுமைகள் மறைந்துபோய் ,
பாலைவனம் பூத்திருக்கு ,
பேராசையை கட்டிடம் கட்டி ,
நிராசையாய் போய் கிளிகளின் சிறு கூண்டும் ,
பசுமை வளர்ந்த பூமியில்
இன்று ஜாதி மதமும் நான்றாய் வளர்கிறது ,
ஒரே ஒரு மாற்றம் ,
அன்று பயிருக்கு நீர் பாய்ச்சினார்கள் ,
இன்றோ ,
மதம் என்ற போய்க்கு ரத்தம் தான் பாய்ச்சுகிறார்கள் ,
வீரனாய் ஒரு நாள் வாழ் !
மதத்தை கொலை செய்
மனிதனாக மட்டும் வாழ் ,
போதையை ஒதுக்கு ,
பேதையாய் வாழ் ,
லஞ்சத்தை ஒழி ,
லட்சியத்தோடு வாழ் ,
அதிகாரங்களை தூள் தூளாக்கு,
அன்பைமட்டும் நிலைநாட்டு ,
துணிந்து வாழ் ,
நீதியை போதி,
நேர்மையை கற்றுக்கொடு ,
உண்மையை நிலைநாட்டு ,
ஊரார்க்கு உதவி செய் ,
அதர்மத்தை அடித்து விரட்டு ,
மொத்தத்தில்
வீரனாய் ஒரு நாலாவது வாழ் !

