தெய்வ மொழி

குழந்தைகள் பாடுவது
எந்த மொழி
என
அறியத் துடிக்கிறேன்...
ஈரைந்து மாதங்கள்
என் பாதி அனுபவித்த
வலியெல்லாம்
ஓர் நொடியில்
கரைத்து விட்ட
இசை - இது
மொழியே இல்லாத
கவிதை
வரிகளே இல்லாத
வாக்கியம்

ங்கா என்ற இரண்டே
எழுத்துக்கள் தான்
மொழிக் கடவுளின்
தனித்துவப் படைப்போ..

தமிழ் எனக்குப் பேசத்தான்
தெரியும் - ஆனால்
கவி எழுத்தத்துடிக்கிறேன்
கவி எழுதத்தெரிந்திருந்தால்
காவியமே படைப்பேனோ...

கம்பனே -நீ இன்னும்
ஒரு முறை பிறந்திடு..
என் மகள் மொழியில்
நூறு
காவியங்கள் படைத்திடு...

எழுதியவர் : கலாப்ரியன் (2-May-12, 2:06 am)
Tanglish : deiva mozhi
பார்வை : 417

மேலே