நானிருப்பேன்!!!
செல்லும் வழியெல்லாம்,
சிவந்த உன் இதழ்கள்,
சொல்லிய சொற்கள்,
என்னை சுண்டி இழுத்தது!!!
கண்டும் காணாமல் நீயிருந்தாலும்,
கன்னியின் மனம் மட்டும்,
காண்பதெல்லாம் நீயென்றே கணித்தது!!!
ஊடல் ஒருபுறமிருக்க,
உயிரான உறவின் உள்ளத்தை,
உடற்று நோக்க வேண்டாம்,
உணரக் கூடவா மனமில்லை?
என் தேகம் தனித்திருக்க,
உன் மூசுக் காற்றின் சூட்டை எதிர்நோக்கியிருக்க,
ஊடல் கொண்ட மனதின் ஓரத்தில்,
நாம் காதல் கொண்ட நினைவை நிறுத்திப் பார்!!!
காத்திருக்கும் உன் காதலின் காதினில்,
காதலுடன் சொல்!
உன் தாகம் தீர்க்கும் தீர்த்தமாய்,
என்றும் நானிருப்பேன் என்று!!!

